/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பச்சையாக மாறிய தாமிரபரணி துாத்துக்குடி கலெக்டர் ஆய்வு
/
பச்சையாக மாறிய தாமிரபரணி துாத்துக்குடி கலெக்டர் ஆய்வு
பச்சையாக மாறிய தாமிரபரணி துாத்துக்குடி கலெக்டர் ஆய்வு
பச்சையாக மாறிய தாமிரபரணி துாத்துக்குடி கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 28, 2024 02:05 AM

துாத்துக்குடி: தாமிரபணி ஆற்றில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியதாக புகார் எழுந்தது. மேலும், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்களுக்கும் தாமிரபரணி ஆற்றின் மூலமாக வழங்கப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மக்களுக்கு வழங்கப்படும் தாமிரபரணி ஆற்று தண்ணீர் பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் வழங்கப்படுவதால், குடிப்பதற்கு இயலாத வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்களின் அடிப்பகுதியில் சகதி, மணல் கழிவுகள் அப்படியே படிந்து விடுகிறது. எனவே, மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான தண்ணீர் வழங்க வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் உட்பகுதிகளில் காணப்படும் பச்சை நிற தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதற்கு காரணம், திருநெல்வேலி நகர் பகுதியில் இருந்து கலக்கும் கழிவு நீர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

