/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடையில் கிடந்த நகைகள் ஒப்படைத்த சகோதரர்கள்
/
கடையில் கிடந்த நகைகள் ஒப்படைத்த சகோதரர்கள்
ADDED : ஜூலை 17, 2024 09:36 PM
கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன்கள் காமராஜ், கோபிநாத். இவர்கள், பல்லாக் ரோடு எஸ்.எஸ்.நகரில் பலசரக்குக் கடை நடத்துகின்றனர். நேற்று காலை கடைக்கு வந்த ஒருவர், தான் எடுத்து வந்த நகைகள் பொட்டலத்தை, தவறுதலாக வைத்து விட்டு சென்று விட்டார்.
அதை பார்த்த சகோதரர்கள், பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கள் வேல்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோரிடம் விவரங்களை கூறி, நகை பொட்டலத்தை ஒப்படைத்தனர். சகோதரர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
இந்நிலையில், அந்த நகைகள் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த முத்து மனைவி மகாலட்சுமிக்கு உரியது என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் மகாலட்சுமியிடம் நகைகளை ஒப்படைத்தனர்.