sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

துாத்துக்குடியில் துர்நாற்றம் வீசிய குப்பை கிடங்கு அடர் வனமாக மாற்றியது மாநகராட்சி நிர்வாகம்

/

துாத்துக்குடியில் துர்நாற்றம் வீசிய குப்பை கிடங்கு அடர் வனமாக மாற்றியது மாநகராட்சி நிர்வாகம்

துாத்துக்குடியில் துர்நாற்றம் வீசிய குப்பை கிடங்கு அடர் வனமாக மாற்றியது மாநகராட்சி நிர்வாகம்

துாத்துக்குடியில் துர்நாற்றம் வீசிய குப்பை கிடங்கு அடர் வனமாக மாற்றியது மாநகராட்சி நிர்வாகம்


ADDED : மே 04, 2024 01:23 AM

Google News

ADDED : மே 04, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அய்யனார்புரம் பகுதியில் உள்ளது. 500 ஏக்கர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் மட்டுமே வீசி வந்தது. இதையெடுத்து, 2019ல் 2 ஏக்கர் பரப்பளவில் 'பயோ மைனிங்' முறையில் குப்பைகளை அகற்றி மரங்களை நடவு செய்யும் பணியை அப்போதைய கமிஷனர் ஜெயசீலன் துவக்கினார்.

மியாவாக்கி முறையில், 130 ஏக்கரில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 2019ல் நடவு செய்யப்பட்ட செடிகள் தற்போது, 15 அடி மரங்களாக உயர்ந்து அடர்வனமாக காட்சியளிக்கிறது. கொய்யா, மாதுளை, கொடிக்காபுளி போன்ற பழமரங்கள் பலன் கொடுக்க துவங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல அமைப்புகள் உதவியுடன் தற்போது, அடர் காடாக குப்பைக் கிடங்காக மாற்றி உள்ளார்.

பழ மரங்கள், நிழல் தரும் மரங்கள், மரத்தடி தரும் மரங்கள், காய்கறி, பூச்செடிகள், மூலிகை செடிகள் என சுமார் 300 வகையான மரங்கள் மற்றும் செடிகள் இங்கே நடவு செய்யப்பட்டுள்ளன. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் 'பயோ டைவர்சிட்டி பார்க்' அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வல்லுனர் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த பகுதியில் மரம், செடி கொடிகள் சரியாக வளராது. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என வல்லுனர் குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால், அந்த கருத்து தவறானது என்பதை தற்போது நிரூபித்து இருக்கிறோம். மேயர் ஜெகன் பெரியசாமி முயற்சியால், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, 70,000 மரக்கன்றுகளும், இந்த ஆண்டு 71,000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன.

ஏராளமான மயில்கள் இங்கே வாழ்கின்றன. அவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஏற்ற பகுதியாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளன. ஏராளமான பறவைகள் இங்கு வாழ்கின்றன. தற்போது புதிதாக பல பறவைகள் வந்துள்ளன. முயல், எலி, பாம்பு போன்ற வனவிலங்குகளும், ஏராளமான சிறிய உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

பொது இடங்களில், 2019 லோக்சபா தேர்தலின் போது இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்த அடர் வனத்தின் வேலியாக அவரை மாற்றப்பட்டது. மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் மரக்கன்று நடுவதில் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்கப்படுத்தியதால் இது சாத்தியமாகியது.

மரங்கள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஏதுவாக மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை உபயோகித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us