/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொலையானவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
/
கொலையானவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கொலையானவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கொலையானவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 11:01 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 58, விவசாயி. சாயர்புரம் அருகே சின்ன நட்டாத்தி கிராமத்தில் ஜான்பால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், தோட்டம் அருகே நேற்று முன்தினம் சந்திரசேகர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். சாயர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக சந்திரசேகர் உடல் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரசேகரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், சந்திரசேகர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சந்திரசேகரின் மகன் ராஜதுரை கூறியதாவது:
சந்திரசேகர், 25 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலைபார்த்து வந்தார். அங்கு மேலாளராக உள்ள பார்த்தசாரதி, தொழிலாளி வன்னியராஜ் உள்ளிட்ட சிலர், தோட்டத்தில் உள்ள ஆடு, மாடுகளை உரிமையாளருக்கு தெரியாமல் விற்று வந்துள்ளனர்.
அதை கண்டித்ததால் சந்திரசேகர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சந்திரசேகர் இறப்புக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.