/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பஸ் நிலைய கூரை இடிந்து பயணியர் இருவர் படுகாயம்
/
பஸ் நிலைய கூரை இடிந்து பயணியர் இருவர் படுகாயம்
ADDED : மே 27, 2024 01:02 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 48, குருவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 43, ஆகியோர் நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் விளாத்திக்குளம் பஸ் நிலையத்தில் உள்ள இருக்கையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது, பஸ் நிலைய கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், கண்ணன், ரவிக்குமார் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விளாத்திக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திக்குளம் மக்கள் கூறுகையில், 'விளாத்திக்குளம் பஸ் நிலையம் கட்டப்பட்ட பின் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. இங்கிருந்து, சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
'டவுன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் பஸ் நிலையத்தை பராமரிக்க வேண்டும்' என்றனர்.

