/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காலாவதியான மாத்திரை விற்றவர் ரூ. 30000 இழப்பீடு வழங்க துாத்துக்குடி நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ADDED : ஜூலை 23, 2024 08:43 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், மன்னன்விளையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கோயம்புத்துாரிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 120 மாத்திரை வாங்கினார். காலாவதியான தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து அந்த மாத்திரிகளை கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜெயராமன் கடைக்காரரிடம் மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் கடைக்காரர் உரிய பதில் கொடுக்கவில்லை. இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மாத்திரைக்குரிய விலையான 30 ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு 20,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 10,000 ரூபாய் என மொத்தம் 30,030 ரூபாயை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.