/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் நேர்த்திக்கடன்
/
திருச்செந்துார் கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் நேர்த்திக்கடன்
திருச்செந்துார் கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் நேர்த்திக்கடன்
திருச்செந்துார் கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 12, 2024 11:09 PM
திருச்செந்துார்:திருச்செந்துார் பொது திரிசுதந்திரர்கள் ஏற்பாட்டில் சுப்பிரமணியசுவாமிக்கு ஆண்டுதோறும் சுக்லபஷ்ச சஷ்டி அன்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் கடந்த 44 ஆண்டுகளாக வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தொடர்ந்து 45வது ஆண்டான இந்த ஆண்டும் நேற்று சுக்லபட்ச சஷ்டியை முன்னிட்டு உலக நன்மைக்காக அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதையொட்டி திருச்செந்துார் சிவன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிவன் கோவில் முன்பிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டு உள்மாடவீதி, ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக சுப்பிரமணியசுவாமி கோவிலை சென்று சேர்ந்தனர் இதனைத்தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.
மாலையில் ஏராளமான பக்தர்கள் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை திருச்செந்துார் பொது திரிசுதந்திரர்கள் செய்திருந்தனர்.