ADDED : மே 03, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. ஒரு லட்சம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கழுகுமலை அருகே கே. வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் முத்து மாரிச்சாமி 30. தனியார் பஸ் டிரைவர். இவர் மற்றும் தாயார் அய்யம்மாள் நேற்று காலையில் திருச்செந்தூர் சென்று விட்டனர்.
மாலையில் வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. ஒரு லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது.
திருடிய மர்மநபர்களை கழுகுமலை போலீசார் தேடுகின்றனர்.