/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் ஜெல்லி மீன்களால் பாதிப்பு இல்லை: விஞ்ஞானி தகவல்
/
திருச்செந்துாரில் ஜெல்லி மீன்களால் பாதிப்பு இல்லை: விஞ்ஞானி தகவல்
திருச்செந்துாரில் ஜெல்லி மீன்களால் பாதிப்பு இல்லை: விஞ்ஞானி தகவல்
திருச்செந்துாரில் ஜெல்லி மீன்களால் பாதிப்பு இல்லை: விஞ்ஞானி தகவல்
ADDED : செப் 03, 2024 02:28 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடற்கரை பகுதியில் அடிக்கடி ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால், கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் ஏற்படும் அபாயமும் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, துாத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ரஞ்சித் தலைமையிலான அதிகாரிகள், நேற்று திருச்செந்துார் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர்.
கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை விஞ்ஞானி ரஞ்சித் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுக்காக, துாத்துக்குடி எடுத்துச் சென்றனர். முன்னதாக, மீன்வள ஆராய்ச்சியாளர் ரஞ்சித் கூறியதாவது:
ஆண்டுக்கு இரண்டு முறை இந்த வகை ஜெல்லி மீன்கள் கடற்கரைக்கு வருவது வழக்கம். வெயில் காலம் முடியும் நேரத்திலும், மழைக்காலம் ஆரம்பமாகும் நேரத்திலும் அவை கரை ஒதுங்கும்.
ஜெல்லி மீன்கள் கொட்டும் திறன் கொண்டவை. அவை கொட்டும் போது உடலில் அரிப்பு எடுக்கும். தற்போது வந்துள்ள ஜெல்லி மீன்கள், அலுவல் சொறி எனும் தன்மை கொண்டவை.
இது, மனிதன் மேல் கொட்டும் போது அரிப்பு ஏற்படும். அதற்கு உடனடியாக முதலுதவி எடுத்துக் கொண்டால் மட்டும் போதுமானது. இதனால் பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.