/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் நீராடிய மூவருக்கு கால் முறிவு
/
திருச்செந்துாரில் நீராடிய மூவருக்கு கால் முறிவு
ADDED : ஆக 11, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட பக்தர் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கடற்கரையில் நேற்று பக்தர்கள் புனித நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென எழும்பிய ராட்சத அலையால் சேலத்தைச் சேர்ந்த தங்கம், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாகம்பிரியா, கோவையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய மூவரும் கடலில் சிக்கிக் கொண்டனர்.
ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததில் மூன்று பேருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. கோவில் கடற்கரை பணியாளர்கள் வேகமாக கடலுக்குள் இறங்கி, மூன்று பேரையும் மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

