/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்
/
திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்
திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்
திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்
ADDED : ஆக 10, 2024 02:46 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் நடந்தது.
கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில், சிவகாசி பதிணென் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் அப்பணியில் ஈடுபட்டனர்.
நிரந்தர உண்டியல் மூலம், 5 கோடியே, 78 லட்சத்து, 20,174 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம், 1 லட்சத்து 21,089 ரூபாயும், யானை பராமரிப்பு மூலம், 2 லட்சத்து 34,189 ரூபாயும், வைகாசி விசாக திருவிழா தற்காலிக உண்டியல்கள் மூலம், 92,694 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே, 82 லட்சத்து, 68,146 ரூபாய் கிடைத்தது.
இதில், தங்கம் - 3,787 கிராம், வெள்ளி - 49, 288 கிராமும் இருந்தது. 48 நாட்களில் உண்டியல் காணிக்கையாக, 5 கோடியே, 82 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.