/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மதுக்கடை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கருப்பு கொடி
/
மதுக்கடை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கருப்பு கொடி
மதுக்கடை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கருப்பு கொடி
மதுக்கடை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கருப்பு கொடி
ADDED : மே 21, 2024 06:56 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஸ் நிலையம் பகுதி, தனியார் மருத்துவமனை முன், அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இரண்டு மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கோரிக்கைகளுடன் கூடிய பதாகையை ஏந்தி கடைகள் முன் நின்றனர். இரண்டு மதுக்கடைகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.