/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கடலில் கரை ஒதுங்கிய ஆமை
/
திருச்செந்துார் கடலில் கரை ஒதுங்கிய ஆமை
ADDED : மே 01, 2024 08:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கடற்கரையில், இறந்து அழுகிய நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. அந்த கடல் ஆமை சுமார் 3 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. 50 கிலோ எடையுடன் கூடிய அந்த கடல் ஆமை முகம் சிதலமடைந்து காணப்பட்டது.
வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வகை ஆமை, திருச்செந்துார் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலில் அதிகளவில் காணப்படும் என கூறப்படுகிறது. முட்டையிடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

