/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குண்டாஸில் செஞ்சுரி அடித்த துாத்துக்குடி மாவட்டம்
/
குண்டாஸில் செஞ்சுரி அடித்த துாத்துக்குடி மாவட்டம்
ADDED : ஜூலை 09, 2024 07:12 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மீன் வியாபாரி வெள்ளத்துரை, 49, அவரது நண்பர் மகாராஜன், 55, ஆகியோர் கடந்த மாதம் 7 ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்த முத்துராஜ், 32, மந்தித்தோப்பு கணேஷ்நகரை சேர்ந்த மாரிராஜ், 32, அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த சேர்மக்கனி, 30, ஆகியோரை கைது செய்தனர்.
எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துராஜ், மாரிராஜ், சேர்மக்கனி ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, எஸ்.பி., பாலாஜி சரவணன் கூறியதாவது:
துாத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 100 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.