ADDED : ஆக 19, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கல்லாமொழி மெயின்ரோட்டில் இரு டூவீலர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியாயினர்.
திருநெல்வேலி டவுனை சேர்ந்த மகாராஜன் 32; உடன்குடி அனல்மின்நிலையத்தில் எலக்ட்ரீசியனாக பணிசெய்தார். நேற்று காலை பணி முடிந்து திருச்செந்தூர் நோக்கி டூவீலரில் சென்றார். திருச்செந்தூர் நடுநாலு மூலை கிணறை வனராஜ் 28, நண்பர் நாகர்கோவில் காதர் ஆகியோர் டூவீலரில் எதிரே சென்றனர். கல்லாமொழி மெயின்ரோட்டில் இரு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் மூவரும் காயமடைந்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகாராஜன், வனராஜ் இறந்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காதர் அனுமதிக்கப்பட்டார். திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரித்தனர்.

