/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கிணற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி
/
கிணற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி
ADDED : ஆக 27, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தாமஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ், 14. பூசாரிபட்டியைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜான், 14.
இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், கூசாலிப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.
பம்புசெட் அறையில் இருந்து கிணற்றில் குதித்த போது ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததால், இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர் என கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் அவர்களது உடல்களை மீட்டனர்.நாலாட்டின்புதுார் போலீசார் விசாரித்தனர்.