/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் அனுமதியின்றி மண் திருட்டு அதிகாரிகள் மெத்தனம்; அரசுக்கு வருவாய் இழப்பு
/
துாத்துக்குடியில் அனுமதியின்றி மண் திருட்டு அதிகாரிகள் மெத்தனம்; அரசுக்கு வருவாய் இழப்பு
துாத்துக்குடியில் அனுமதியின்றி மண் திருட்டு அதிகாரிகள் மெத்தனம்; அரசுக்கு வருவாய் இழப்பு
துாத்துக்குடியில் அனுமதியின்றி மண் திருட்டு அதிகாரிகள் மெத்தனம்; அரசுக்கு வருவாய் இழப்பு
ADDED : ஜூலை 07, 2024 04:52 PM

துாத்துக்குடி:
துாத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பட்டா நிலங்களில் கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதியின்றி சவுடு மண் திருப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள செங்கல் சூளைகளுக்கு சவுடு மண் கடத்திச் செல்லப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிடைக்க கூடிய சவுடு மண்ணில் தயாரிக்கப்படும் செங்கல்கள் தரமானதாக இருக்கும். இதனால், செங்கல் சூளைகள் நடத்தி வருவோர் சவுடு மண் எடுக்க கனிமவளத் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல், தனியார் பட்டா நிலங்களை குறி வைத்து மண் எடுக்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சவுடு மண்ணை தனியார் பட்டா நிலத்தில் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கனிம தொகையை செலுத்த வேண்டும்.
முறையாக அனுமதி பெற காலதாமதமாகும் என்பதால் திருட்டு தனமாக சவுடு மண் கொள்ளையை இரவு நேரங்களில் 'ஹிட்டாச்சி' இயந்திரத்தை வைத்து அள்ளி, 'டாரஸ்' லாரிகளில் சேம்பர்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சவுடு மண் கொள்ளை இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், குறு வட்ட வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார், போலீசார், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரின் மறைமுக ஒத்துழைப்புடன் நடக்கிறது. கனிமவளத்துறையில் அனுமதி பெற்றால், 1 மீட்டர் ஆழம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அனுமதியின்றி, 15 அடி ஆழம் வரையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீபராங்குசநல்லுாரில் தனியார் பட்டா நிலத்தில் சவுடு மண் கொள்ளை நடக்கிறது. இந்த மண் கொள்ளைக்கு காரணமான வருவாய் துறை, கனிமவளத் துறை, காவல் துறையினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.