/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்ரீவைகுண்டத்தில் மின்னல் தாக்கி வாலிபர் பலி
/
ஸ்ரீவைகுண்டத்தில் மின்னல் தாக்கி வாலிபர் பலி
ADDED : ஆக 06, 2024 12:43 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன், 37. இவர், நேற்று விவசாய நிலத்தில் மாடு கட்டும் தொழுவத்தில் நின்று கொண்டிருந்தார். மாட்டை கட்டுவதற்காக தொழுவத்தில் நீளமான இரும்பு கம்பி மூலம் குழி தோண்டி கொண்டிருந்தார்.
அவரது உறவினர்கள் சண்முகக்கனி, 60, ஜானகி, 55, ஆகியோரும் அப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர்கள் இருவரும் தரையில் படுத்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
இருப்பினும், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழந்த மதனுக்கு கிரேஸி என்ற மனைவி உள்ளார்.
இதுகுறித்து, ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரிக்கின்றனர்.