/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கிரேன் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி
/
கிரேன் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி
ADDED : செப் 06, 2024 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் ஒன்பதாவது தளத்தில் கண்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பணிகளை சிங்கப்பூரை சேர்ந்த பி.எஸ்.ஏ., சிகால் என்ற நிறுவனம் செய்து வருகிறது.
அதில், சூப்பர்வைசராக மட்டக்கடை காளியப்பர் தெருவை சேர்ந்த காட்வின், 31, என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று, காட்வின் பணியை கண்காணித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கண்டெய்னர் இறக்கிக் கொண்டிருந்த கிரேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.