திருச்செந்துார் கோவிலில் 101 தம்பதியருக்கு மரியாதை
திருச்செந்துார் கோவிலில் 101 தம்பதியருக்கு மரியாதை
ADDED : பிப் 11, 2026 07:17 AM

துாத்துக்குடி: -திருச்செந்துாரில், 70 வயது பூர்த்தியான, 101 தம்பதியருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 வயது பூர்த்தியான தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 70 வயது பூர்த்தியான, 101 தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விழாவில், தம்பதியர் மாலை மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், தக்கார் அருள்முருகன், 101 தம்பதியருக்கும் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, பட்டு சேலை, மஞ்சள், பூ, மாலை, மஞ்சள் கயிறு, வெற்றிலை, பாக்கு, பழங்கள் கொண்ட தாம்பூலத்தை வழங்கினார்.
தம்பதியரின் உறவினர்கள், பேரக்குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தம்பதியர் அனைவரும் கோவிலுக்குள், முதல் மரியாதை செய்து அழைத்து செல்லப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
