/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெரியதாழையில் 14 மீனவர் மீட்பு
/
பெரியதாழையில் 14 மீனவர் மீட்பு
ADDED : அக் 18, 2024 03:11 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15ம் தேதி 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கரை திரும்பி கொண்டிருந்த போது, பொியதாழை கடற்கரையில் இருந்து 2 நாட்டிகல் மைல் தொலைவில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த 14 பேரும் கடல் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். இதையடுத்து, கரையில் இருந்து சென்ற மீனவர்கள் சிலர் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களையும், பைபர் படகையும்மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். படகு கவிழ்ந்ததில் இன்ஜின் மற்றும் வலைகள் என 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.