/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் பயணியர் 15 பேருக்கு காயம்
/
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் பயணியர் 15 பேருக்கு காயம்
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் பயணியர் 15 பேருக்கு காயம்
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் பயணியர் 15 பேருக்கு காயம்
UPDATED : நவ 24, 2024 02:06 AM
ADDED : நவ 24, 2024 02:04 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பஸ் ஒன்று நேற்று மதியம் 12 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. செல்வக்குமார், 46, ஓட்டிச் சென்றார். நடத்துனராக கார்த்திகேயன், 47, இருந்தார்.
பஸ், கழுகாசலபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த தடுப்பு கம்பியின் மீது மோதி, 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், டிரைவர் செல்வகுமார், நடத்துனர் கார்த்திகேயன் மற்றும் 15 பயணியருக்கு காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற விளாத்திகுளம் போலீசர் காயமடைந்தவர்களை மீட்டு, வாகனங்களில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், இதேபோல அரசு பஸ், 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
எனவே, விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

