/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
/
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ADDED : செப் 27, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் கோடவுன் சிப்காட் வளாகத்தில் உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் அய்யப்பன் , துாத்துக்குடி மேலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார்.
இங்கு சட்ட விரோத பணப்புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலில் துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனையில் ஈடுபட்டனர். மேலாளர் பணியில் இல்லை. ஊழியர்கள் மகேஷ், லிங்கராஜ் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.