/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனுமதியின்றி ரூ.1.25 கோடி பாக்கு இறக்குமதி: 2 பேர் கைது
/
அனுமதியின்றி ரூ.1.25 கோடி பாக்கு இறக்குமதி: 2 பேர் கைது
அனுமதியின்றி ரூ.1.25 கோடி பாக்கு இறக்குமதி: 2 பேர் கைது
அனுமதியின்றி ரூ.1.25 கோடி பாக்கு இறக்குமதி: 2 பேர் கைது
ADDED : ஜன 13, 2025 01:21 AM

துாத்துக்குடி: மலேசியாவில் இருந்து கூலிங் சீட் இறக்குமதி செய்வதாகக்கூறி ரூ.1.25 கோடி மதிப்பில் கொட்டைப்பாக்கு கொண்டு வந்த தொழில் அதிபர், ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடியை சேர்ந்தவர் அய்யனார் 50. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவரது பெயருக்கு மலேசியாவில் இருந்து ஒரு கன்டெய்னரில் கலர் கூலிங் சீட்கள் இறக்குமதி செய்வதாக துாத்துக்குடி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மலேசியாவில் இருந்து அய்யனாருக்காக, கப்பலில் வந்த கன்டெய்னர்களில் ஒன்று வில்லியம் பிரேம்குமார் என்பவரது தனியார் ஷிப்பிங் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஷிப்பிங் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது கன்டெய்னரில் பெயரளவுக்கு கூலிங் சீட்டுகள் இருந்தன. 16 டன் எடையுள்ள கொட்டை பாக்குகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ 1.25 கோடி.
கொட்டைப்பாக்குகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கலப்பதால் இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. மேலும் வரியும் இரு மடங்கு வசூலிக்கப்படும். எனவே அனுமதி இன்றியும், வரி ஏய்ப்பும் செய்த அய்யனார், வில்லியம் பிரேம்குமார் கைது செய்யப்பட்டனர்.