/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
லாரி- - ஆட்டோ மோதல் குலசையில் 2 பேர் பலி
/
லாரி- - ஆட்டோ மோதல் குலசையில் 2 பேர் பலி
ADDED : அக் 04, 2024 02:22 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே கீழசெக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிந்து, கோவிலில் இருந்து வேன் மற்றும் சரக்கு ஆட்டோவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவில் 15க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே ஆட்டோ சென்ற போது, எதிரே வந்த மினி லாரியுடன் மோதியது. லோடு ஆட்டோவில் இருந்த 9 பேர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களை திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின், அனைவரும் மேல்சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, செக்காரக்குடியை சேர்ந்த கிருஷ்ணபெருமாள், 25, முடிவைத்தானேந்தலை சேர்ந்த பெரும்படையான், 20, இறந்தனர்.
ஒன்பது பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரியை ஓட்டிய திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன், 36, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

