/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கல் மதுரை ரவுடிகள் 2 பேர் கைது
/
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கல் மதுரை ரவுடிகள் 2 பேர் கைது
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கல் மதுரை ரவுடிகள் 2 பேர் கைது
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கல் மதுரை ரவுடிகள் 2 பேர் கைது
ADDED : ஜன 03, 2025 03:02 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி நாலாட்டின்புத்துார் பகுதியில் ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு திடீரென சோதனை செய்தனர். அரிவாளுடன் பதுங்கி இருந்த 3 பேரை அவர்கள் கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
கைதான 3 பேரில் இருவர் மதுரையை சேர்ந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் கூறியதாவது:
மதுரையில் வெள்ளக்காளி என்பவர் தலைமையிலான குழுவினருக்கும், குருசாமி என்பவர் தலைமையிலான குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது.
இதில், குருசாமி குழுவை சேர்ந்த கீரைத்துறை அழகுராஜா என்ற கொட்டுராஜா, 29, முனியசாமி என்ற கணக்கன், 50, மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோவில்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த தங்கராஜ், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் இருந்தது. கைதான அழகுராஜா மீது 3 கொலை வழக்கு உள்பட 5 வழக்குகளும், முனியசாமி மீது 4 கொலை வழக்கு உள்பட 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
மதுரையில் தங்களுக்கு எதிர் முகாமை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் இருந்ததால் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியில் வீடு எடுத்து பதுங்கி இருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால், வேறு யாரையும் கொலை செய்யத் திட்டமிட்டு பதுங்கி இருந்தனரா. என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

