/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பாலிடெக்னிக்கில் படித்த 200 பேர் 'வின்பாஸ்ட்' நிறுவன பணிக்கு தேர்வு
/
பாலிடெக்னிக்கில் படித்த 200 பேர் 'வின்பாஸ்ட்' நிறுவன பணிக்கு தேர்வு
பாலிடெக்னிக்கில் படித்த 200 பேர் 'வின்பாஸ்ட்' நிறுவன பணிக்கு தேர்வு
பாலிடெக்னிக்கில் படித்த 200 பேர் 'வின்பாஸ்ட்' நிறுவன பணிக்கு தேர்வு
ADDED : ஜூலை 11, 2025 02:24 AM
துாத்துக்குடி:வின்பாஸ்ட் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிய, முதல்கட்டமாக பாலிடெக்னிக்கில் படித்த, 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சில்லாநத்தம் பகுதியில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை, 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதிக்குள் உற்பத்தியை துவக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார் தொழிற்சாலையில் பட்டதாரிகளுக்கான மேற்பார்வையாளர் பணி, நிர்வாக பணிகளுக்கு சில நாட்களுக்கு முன் நேர்முகத்தேர்வு நடந்தது.
இந்நிலையில், முதல்கட்டமாக மின்சார வாகன உற்பத்தி ஆலையில் பணிபுரிய, பாலிடெக்னிக் முடித்த, 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளில், 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேர்வு செய்து பணி வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
வின்பாஸ்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக பணியமர்த்தப்பட்ட 200 பேருக்கு வியட்நாம் நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் இந்திய நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச வாகன தரநிலைகளை பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் மற்றும் மாநில தொழில்துறையின் உதவியுடன், 200 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.
எங்கள் நிறுவன ஊழியர்களில், 80 சதவீதம் பேர் உள்ளூரை சேர்ந்த பட்டதாரிகள் அல்லது பயிற்சி பெறுபவர்களாக இருப்பர். அதே நேரத்தில், 20 சதவீதம் பேர் அனுபவம் வாய்ந்த இந்திய மற்றும் சர்வதேச நிபுணர்களாக இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் முதல்வன் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வின்பாஸ்ட் மின்னணு வாகன உற்பத்தி நிறுவன தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவும் வகையில், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
'பாலிடெக்னிக் மாணவர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.