/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பணி முடிக்காத கான்ட்ராக்டர் ரூ.2.60 லட்சம் தர உத்தரவு
/
பணி முடிக்காத கான்ட்ராக்டர் ரூ.2.60 லட்சம் தர உத்தரவு
பணி முடிக்காத கான்ட்ராக்டர் ரூ.2.60 லட்சம் தர உத்தரவு
பணி முடிக்காத கான்ட்ராக்டர் ரூ.2.60 லட்சம் தர உத்தரவு
ADDED : செப் 28, 2024 02:12 AM
துாத்துக்குடி:திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் திருப்பதி மூர்த்தி, 53. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரிடம் வீட்டின் கீழ்தளத்தை புதுப்பிக்கவும், கூடுதல் கட்டுமானம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இதற்காக, 11 லட்சம் ரூபாயை அந்த கான்ட்ராக்டரிடம் பல தவணைகளாக வழங்கினார்.
ஒப்பந்தத்தில் கூறியபடி, மூன்று மாதங்களில் பணிகளை முடிக்கவில்லை; ஏழு மாதங்கள் ஆகியும் முடியவில்லை.
இதனால், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் திருப்பதி மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். பின், துாத்துக்குடி மாவட்டத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து, கான்ட்ராக்டர் அதிகமாக பெற்ற 2 லட்சம் ரூபாயை, மனு தாக்கல் செய்த நாளில் இருந்து, வட்டியுடன் வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், சேவை குறைபாடு, மன உளைச்சல், வழக்கு செலவு என, 2.60 லட்சம் ரூபாயை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.