ADDED : ஜன 27, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: கடலில் குளித்த மூன்று சிறுவர்கள், அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஜாஹீர் உசேன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் கார்த்திக், 12; வனராஜன் மகன் திருமணி, 13; கதிரேசன் மகன் முகேந்திரன், 12. நண்பர்களான மூவரும் அங்குள்ள ஒரு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தனர். நேற்று, கடற்கரையில் கபடி விளையாட செல்வதாக கூறி, வீட்டில் இருந்து சென்றவர்கள், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தாளமுத்துநகர், மொட்டைகோபுரம் கடல் பகுதிக்கு சென்று குளித்துள்ளனர்.
அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்களில் சிலர் தப்பிய நிலையில், நரேன் கார்த்திக், திருமணி, முகேந்திரன் ஆகியோர் அலையில் இழுத்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
