/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தங்க நாணயங்களை திருடிய பணிப்பெண் உட்பட 3 பேர் கைது
/
தங்க நாணயங்களை திருடிய பணிப்பெண் உட்பட 3 பேர் கைது
தங்க நாணயங்களை திருடிய பணிப்பெண் உட்பட 3 பேர் கைது
தங்க நாணயங்களை திருடிய பணிப்பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : ஏப் 18, 2025 01:38 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த யாகூப், 55, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சாஜிதா பர்வீன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசிக்கிறார். அவருக்கு உதவியாக அருணாசலபுரத்தைச் சேர்ந்த அல்பியா, 35, வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் சாஜிதா பர்வீன் வீட்டு லாக்கரில் இருந்து பொருட்களை எடுத்துள்ளார். லாக்கரில் இருந்த தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்களை, ஒரு சிறிய பெட்டியில் வைத்து பூட்டி உள்ளார். ஜூலை மாதம் மீண்டும் லாக்கரை திறந்தபோது, அவை காணாமல் போனது தெரியவந்தது.
சாஜியா பர்வீனின் மகன் ஷேக் முஹ்ஸின், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அல்பியாவை கண்காணித்த போது, அவர் தங்க நாணயங்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அல்பியா திருடிய தங்க நாணயங்களை விற்பனை செய்ய உதவிய அருணாசலபுரத்தைச் சேர்ந்த இசக்கி தங்கம், 42, அவரது தம்பி தமிழரசன், 23, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, மேலும் இருவரை தேடுகின்றனர்.