/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நகைக்காக 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை
/
நகைக்காக 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை
ADDED : மே 09, 2025 02:39 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி - பார்வதி தம்பதியின் 2வது குழந்தை ஆதிரா, 3. பெரியசாமி அதே பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
பார்வதி நேற்று மாலை மகள் ஆதிராவுடன் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த மர்ம நபர் ஒருவர், பார்வதி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். அவர் தடுத்ததால், குழந்தை ஆதிராவை கையில் துாக்கிக் கொண்டு, குழந்தை கழுத்தை நெரித்தபடி நகையை கேட்டு மிரட்டியுள்ளார். பார்வதி நகையை கழற்றி வீசியுள்ளார்.இதற்கிடையே, குழந்தை ஆதிரா மயங்கியதால், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். பார்வதி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருச்செந்துார் போலீசார் மர்ம நபரை தேடுகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.