/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'
/
வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'
வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'
வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'
ADDED : அக் 24, 2024 02:09 AM

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், 55. இவருக்கும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளத்துார் பகுதியைச் சேர்ந்த வரதராஜன், 62, என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2021ல் பால்ராஜின் மகனுக்கு, சென்னை துறைமுகத்தில் தோட்ட வேலை வாங்கித் தருவதாக, வரதராஜன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக, 12 லட்சம் ரூபாயை பெற்றார் எனக் கூறப்படுகிறது. வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திரும்ப வழங்காததால் வரதராஜன் மீது மாவட்ட குற்றப்பிரிவில் பால்ராஜ் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் அவரை மார்ச் மாதம் கைது செய்தனர். வழக்கு விசாரணை துாத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குபேர சுந்தர், வரதராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

