/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'குலசையிலிருந்து அடுத்த ஆண்டு 500 கிலோ ராக்கெட் ஏவப்படும்'
/
'குலசையிலிருந்து அடுத்த ஆண்டு 500 கிலோ ராக்கெட் ஏவப்படும்'
'குலசையிலிருந்து அடுத்த ஆண்டு 500 கிலோ ராக்கெட் ஏவப்படும்'
'குலசையிலிருந்து அடுத்த ஆண்டு 500 கிலோ ராக்கெட் ஏவப்படும்'
ADDED : ஆக 28, 2025 02:11 AM

துாத்துக்குடி:''குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு இறுதியில், 500 கிலோ எடை கொண்ட சிறிய ராக்கெட் விண்ணில் ஏ வப்படும்,'' என, 'இஸ்ரோ' எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் உள்கட்டமைப்புகளுக்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டு ராக்கெட் ஏவுதள கட்டடத் திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய இயக்குநர் பத்மகுமார், துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் அளித்த பேட்டி:
இந்திய விண்வெளி நாளில் மிக முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் இங்கு நடந்து வருகின்றன. 100 கோடி ரூபாய் மதிப்பிலான மிக முக்கியமான ராக்கெட் ஏவும் இடம் மற்றும் கட்டுமான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் ஏவப்படும்.
ஸ்ரீஹரிகோட்டா வளாகத்தில் இரண்டு ராக்கெட் தளம் உள்ளது. 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது தளத்திற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வரும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். குலசேகரன்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 25 ராக்கெட்கள் வரை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.