/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: கனிமொழி
/
80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: கனிமொழி
ADDED : செப் 03, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் நேற்று கனிமொழி எம்.பி., அளித்த பேட்டி:
தமிழகத்தில் தெருநாய்கள் பிரச்னை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். தி.மு.க., தேர்தல் அறிக்கை தொடர்பாக அன்புமணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதுவே போதுமான விளக்கம். கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சில வாக்குறுதிகள் தான் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.