/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீனவர் வலையில் சிக்கிய 1 டன் கொம்பு திருக்கை மீன்
/
மீனவர் வலையில் சிக்கிய 1 டன் கொம்பு திருக்கை மீன்
ADDED : ஜன 22, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே, மீனவர் வலையில் ௧ டன் கொம்பு திருக்கை மீன் சிக்கியது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழையைச் சேர்ந்த ஜோசப் என்ற மீனவர், ஐந்து பேருடன் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார்.
அவர்கள் வலையில் ராட்சத மீன் சிக்கியதால், அதை வெளியே இழுக்க முடியாமல், கயிறு கட்டி, அப்படியே கடற்கரைக்கு இழுத்து வந்தனர். அது, 1 டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் என தெரிந்தது. அந்த கொம்பு திருக்கை மீன், 56,000 ரூபாய்க்கு ஏலம் போனது. பெரியதாழையில், 1 டன் திருக்கை மீன் இதுவரை கிடைத்தது இல்லை என, அப்பகுதி மீனவர்கள் கூறினர்.