/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் உலா வரும் ஒட்டகம்
/
கோவில்பட்டியில் உலா வரும் ஒட்டகம்
ADDED : நவ 03, 2024 03:10 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி பகுதியில் நேற்று முன்தினம் ஒட்டகம் ஒன்று மானாவாரி பயிர்களில் மேய்ந்து கொண்டு இருந்தது.
வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி பகுதியில் ஒட்டகத்தை பார்த்தவர்கள் வேடிக்கையாக அதனை பின் தொடர்ந்தனர். ஒட்டகமும் அங்கிருந்து நழுவிச் சென்றது. ஒட்டகத்தை மீட்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் தங்களது விலங்கு பட்டியலில் ஒட்டகம் இல்லாததாலும் அதனால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்பதாலும் அதனை பிடிக்க முடியாது என வனத்துறையினர் மறுத்து விட்டனர்.
சர்க்கஸ் குழுவில் இருந்து தப்பி வந்ததா, குர்பானி கொடுக்க வளர்த்தவர்களிடமிருந்து தப்பியதா என தெரியவில்லை. இரண்டு நாட்களாகியும் ஒட்டகம் இன்னும் மீட்கப்படவில்லை.