/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காதல்ஜோடியிடம் நகை பறிப்பு போலீஸ்காரர் மீது வழக்கு
/
காதல்ஜோடியிடம் நகை பறிப்பு போலீஸ்காரர் மீது வழக்கு
காதல்ஜோடியிடம் நகை பறிப்பு போலீஸ்காரர் மீது வழக்கு
காதல்ஜோடியிடம் நகை பறிப்பு போலீஸ்காரர் மீது வழக்கு
ADDED : மார் 17, 2024 07:42 AM
தூத்துக்குடி : துாத்துக்குடி கடற்கரையில் காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவில் சில தினங்களுக்கு முன்ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்தது. அங்கு வந்த ஒருவர் அக்காட்சியை அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவர்களிடம் காண்பித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பெண் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகையை பறித்துச்சென்றார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாலிபர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது அங்கு நகைபறிப்பில் ஈடுபட்டது துாத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த ரெனீஸ் பெர்னான்டோ என்பதும், அவர் 2021 முதல் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசாக பணிபுரிவதும் தெரியவந்தது. அவர் மீது மிரட்டி நகை பறித்த வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடுகின்றனர்.

