/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
/
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
ADDED : மே 15, 2025 06:48 AM

துாத்துக்குடி : குப்பையில் தெரியாமல் வீசப்பட்ட, 3 சவரன் தங்க நகையை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாநகராட்சி சத்திரம்தெருவில் வசித்து வரும் சங்கரசுப்பிரமணியன் என்பவர் வீட்டில் இருந்து நேற்று அப்பகுதியை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்தனர்.
திடக்கழிவு வாகனத்தில் அவர் கொடுத்த குப்பையுடன் 3 சவரன் தங்க சங்கிலியும் இருந்துள்ளது.
குப்பையை தரம் பிரிக்கும்போது அந்த நகையை, துாய்மை பணியாளர்கள் லதா, முருகேஸ்வரி, லட்சுமி ஆகியோர் கண்டுபிடித்தனர். பின், வாகன டிரைவர் சரவணன், கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் உதவியோடு, அந்த நகை சங்கரசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகையை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த பணியாளர்களை, மேயர் ஜெகன் பெரியசாமி அழைத்து, சால்வை அணிவித்து, அன்பளிப்பு வழங்கி பாராட்டினார்.