/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தாசில்தாருக்கு ரூ.5 லட்சம் கப்பம்; மா.கம்யூ., போஸ்டரால் பரபரப்பு
/
தாசில்தாருக்கு ரூ.5 லட்சம் கப்பம்; மா.கம்யூ., போஸ்டரால் பரபரப்பு
தாசில்தாருக்கு ரூ.5 லட்சம் கப்பம்; மா.கம்யூ., போஸ்டரால் பரபரப்பு
தாசில்தாருக்கு ரூ.5 லட்சம் கப்பம்; மா.கம்யூ., போஸ்டரால் பரபரப்பு
UPDATED : ஆக 29, 2025 07:11 AM
ADDED : ஆக 29, 2025 05:47 AM

துாத்துக்குடி: 'தாசில்தார், மாதம், 5 லட்சம் ரூபாய் கப்பம் கேட்கிறார்' என, மா.கம்யூ.,வி னர் ஒட்டியுள்ள போஸ்டரால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாசில்தாராக, ஜூன் 4ல் இருந்து பாலசுப்பிரமணியம் பணியில் இருக்கிறார். சான்றிதழ், பட்டா வழங்குதல் உட்பட, அனைத்து பணிகளுக்கும் அவர் பணம் கேட்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உட்பட, நகரின் பெரும்பாலான இடங்களில் மா.கம்யூ.,வினர், தாசில்தாரை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள் ளனர்.
அதில், 'வருவாய் துறையே... சர்வே துறையினரிடம், மாதம், 5 லட்சம் ரூபாய் கப்பம் கேட்கும் கோவில்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடு...' என, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மா. கம்யூ., நகர செயலர் சீனிவாசன் கூறுகையில், ''ஒரு பட்டாவுக்கு, 1,000 ரூபாய் வீதம், 500 பட்டாக்களுக்கு, மாதந்தோறும், 5 லட்சம் ரூபாய் தந்தால் தான் ஒப்புதல் என, தாசில்தார் பாலசுப்பிரமணியம் கறாராக வசூலில் ஈடுபடுகிறார்.
''பணம் தர மறுக்கும் சர்வேயர்களின் மூலம் வரப்படும் பட்டாக்கள் கிடப்பில் போடப்படுகிறது. அவரது ஊழல் நடவடிக்கையை கண்டித்து, வரும், 18ல் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

