/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் டீ கடைக்காரர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
/
துாத்துக்குடியில் டீ கடைக்காரர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
துாத்துக்குடியில் டீ கடைக்காரர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
துாத்துக்குடியில் டீ கடைக்காரர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
ADDED : அக் 03, 2024 02:20 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மீளவிட்டான் சாலை சந்திப்பு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ஜெயசுந்தர், 69. சில ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், இரவில் டீக்கடையிலேயே துாங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், டீக்கடையில் துாங்கிக் கொண்டிருந்த அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஜெயசுந்தர் தினமும் டீக்கடையில் நண்பர்கள் சிலருடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோல, நேற்று முன்தினம் இரவில், நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
எனினும், குடும்பத் தகராறு அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.