/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
/
துாத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
துாத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
துாத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
ADDED : செப் 20, 2024 11:42 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன், 33, என்பவர் புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் வசித்து வந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 7:00 மணிக்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது டூ - வீலரில் வந்த மூன்று பேர், அவரை வெட்டி கொலை செய்து தப்பினர். கொலை குறித்து, புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலையுண்ட முருகன் மீது, மாரிதங்கம் என்பவரை கொலை செய்ய முயன்றதாக சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
துாத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த மாரிதங்கம், 23, என்பவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தராஜன், 35, என்பவருக்கும் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்தது.
இதுதொடர்பான தகராறில், 2023ல் மாரிதங்கத்தை, ஆனந்தராஜனும், இறந்து போன முருகனும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக, சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.
அந்த கொலை முயற்சிக்கு பழிக்குப் பழியாக மாரிதங்கம், நண்பர்களுடன் சேர்ந்து முருகனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.