ADDED : ஏப் 20, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், தெற்குகோனார்கோட்டை புதுார் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார், 21. அப்பகுதி சிறுமியரிடம் அத்துமீறி நடந்து வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் மகேஷ்குமார் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினார். சிறுமி மற்றும் அவரது பாட்டி, போலீசில் புகார் அளித்தனர். கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.