/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனல் மின்நிலைய சோதனை ஓட்டத்தில் விபத்து
/
அனல் மின்நிலைய சோதனை ஓட்டத்தில் விபத்து
ADDED : மே 01, 2025 01:44 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே கல்லாமொழி கிராமத்தில், தலா 660 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்களுடன் கூடிய அனல் மின் நிலையம் கட்டப்படுகிறது. முதல் யூனிட் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று, சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லரில் இருந்து வெளிவரும் பைப் உடைந்து விழுந்தது. இதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அமீத்குமார், 26, என்பவருக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. பிரிட்டம் மண்டல், 21, பிஸ்வநாந்த், 20, ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
மூவரும், திருச்செந்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.