/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு
/
ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு
ADDED : ஆக 06, 2025 12:44 AM
குரூஸ்புரம்:ஐஸ் கட்டி உற்பத்தி ஆலையில் வாயு கசிவால், மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
துாத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் ஒயிட். கீழ அலங்காரதட்டு மீனவர் காலனியில், 'நியூ பால் ஐஸ் பிளான்ட்' என்ற பெயரில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளாக இயங்கி வரும் ஐஸ் பிளான்ட்டில், மூன்று மாதங்களாக முறையாக பராமரிப்பு இல்லை. நேற்று முன்தினம் இரவு, ஆலையில் இருந்து திடீரென அதிகளவு அமோனியா வாயு வெளியேறியதால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஏ.எஸ்.பி., மதன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் அமோனியா வாயு வெளியேறுவதை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் வாயு வெளியேறுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.