தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ 8,000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கையாக முத்தெடுப்பு

 8,000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கையாக முத்தெடுப்பு

 8,000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கையாக முத்தெடுப்பு


ADDED : ஜூன் 24, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: து ாத்துக்குடி அருகே, 8,000 ஆண்டுகளுக்கு முன், சிப்பி வளர்ப்பிற்கு உகந்த நீர்நிலைகளை உருவாக்கி, முத்து எடுத்ததுள்ளதாக யாம் தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் மேலாண் நிர்வாகி சதாசிவம் கூறியதாவது:

துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில், 8,000 முதல், 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய, 'ஹோலோசீன்' காலத்தைச் சேர்ந்த புவி - தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

மத்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், பனையூர், பட்டினமருதுார், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நத்தை இனங்கள், மீன் இனங்கள், இரு ஓடுடைய சிப்பிகள் உள்ளிட்ட 104 வகை கடல்சார் உயிரிகளின் புதைபடிவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஊற்றுநீர் சுரக்கும் பகுதியில் குளம் வெட்டி, அதில் ஆற்றுநீர் மற்றும் கடல்நீரை கலக்கும் வகையில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்ததாகவும், அங்கு சிப்பிகள் வளர்க்கப்பட்டதாகவும், பிரிட்டிஷ் ஆய்வாளர் ராபர்ட் ஓரம், 18ம் நுாற்றாண்டில் பதிவு செய்துள்ளார்.

வாஸ் கோடகாமா அப்பகுதியில் சிப்பி வளர்ப்பு குளங்கள் இருந்ததாக பதிவு செய்துள்ளார். அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தான், தற்போது இந்த புதைபடிவங்கள் கிடைக்கின்றன. கடலில் முத்து குளிப்பதை போலவே, செயற்கையாகவும் சிப்பிகளை வளர்த்து முத்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அப்பகுதி மக்கள் அறிந்திருந் ததை உணர முடிகிறது.

இத ற்கு அருகில் உள்ள ஊர்களில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரோமானிய நாணயங்கள், எழுத்துப்பொறிப்பு பானை ஓடுகள், செம்பாலான தொல்பொருட்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட சான்றுகள் கிடைத்துள்ளன.

இவற்றால், இப்பகுதியில் முத்து வணிகம் சர்வதேச அளவில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இப்பகுதி, கடல் உள்வாங்குதல் அல்லது சுனாமியால் அழிந்திருக்கலாம்.

தமிழர்களின் வரலாற்றை அறிய, சமதளப் பகுதிகளில் அகழாய்வுகளை நடத்துவது போல, கடற்கரை ஓரங்களில் அகழாய்வு செய்தால், அழிந்த பழைய நகர நாகரிகங்களை பற்றி அறிய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us