/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அழகுசாதன பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி
/
அழகுசாதன பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி
ADDED : அக் 24, 2024 01:58 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள்உள்ளிட்ட பொருட்கள்கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை முள்ளக்காடு - கோவளம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், வாகனத்தில் சோதனை நடத்தியபோது ஏலக்காய், மஞ்சள், பீடி இலை பண்டல்கள், அழகுசாதனப் பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்.
அந்த பொருட்களை படகு வாயிலாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏரல் மற்றும் துாத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.