ADDED : ஏப் 29, 2026 01:57 AM
துாத்துக்குடி: குடி போதையில், வங்கி பெண் மேலாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கோவில்பட்டி ராமசரஸ்வதிநகரை சேர்ந்த லட்சுமிபிரபா, 37, என்பவர் மேலாளராக பணிபுரிகிறார்.
இந்த வங்கியில், நாகலாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ், 37, என்பவர், நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.
நகையை திருப்புவதற்காக நேற்று, நாகராஜ் வங்கிக்கு சென்றார். வட்டி வீதம் அதிகமாக இருப்பதாக கூறி, லட்சுமிபிரபாவிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து வெளியே சென்ற நாகராஜ், சிறிது நேரம் கழித்து, குடிபோதையில் வங்கிக்குள் நுழைந்தார்.
நேரிடையாக லட்சுமிபிரபா அறைக்கு சென்றவர், அங்கிருந்த நாற்காலியால் அவரை தாக்கினார். லட்சுமிபிரபா புகாரில், கயத்தாறு போலீசார், நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.
