ADDED : ஏப் 01, 2026 03:32 AM

துாத்துக்குடி: உடன்குடியில், ஆட்டோ டிரைவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி, சாத்திரக்கோன்விளையை சேர்ந்தவர் வேல்முருகன், 31; ஆட்டோ டிரைவர். வழக்கம் போல, நேற்று மதியம், உடன்குடி பஜாரில் நின்று கொண்டிருந்தார். பைக்கில் வந்த மூவர், அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டி, கையை துண்டாக்கி, முகத்தை சிதைத்து, கொலை செய்து, தப்பினர்.
குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்தனர். கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன், 23, மற்றும் இரு இளம் சிறாரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கைதான கோவிந்தனின் சகோதரி முத்துலட்சுமி, 2024ல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பெருமாள் மகன் சுப்பையாதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
' அதற்கு பழிவாங்கும் நோக்கில், சுப்பையாதாசின் தம்பியான வேல்முருகனை, கோவிந்தன் மற்றும் சிலர் நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர்' என்றனர்.
