/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி: முகவர் கைது
/
வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி: முகவர் கைது
ADDED : ஜன 03, 2025 11:41 PM

தூத்துக்குடி:தூத்துக்குடி நகர கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் ரூ. 18 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி நகர கூட்டுறவு வங்கியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் 44, மகேந்திரன் 36, கிருஷ்ணமூர்த்தி 53, ஆகியோர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். இவர்கள் மாதம் தோறும் வங்கியின் தினசரி சேமிப்பு முகவர் பிரேம்குமாரிடம் 36, பணம் செலுத்தி ரசீதும் பெற்றுக் கொண்டனர். ஆனால் பிரேம்குமார் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்தார். மேலும் தேவராஜ் என்பவரிடமும் ரூ. 3 லட்சத்து 76 ஆயிரம் பெற்று வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றினார்.
ரூ. 18 லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. குற்றப்பிரிவு போலீசார் சென்னை திருவள்ளூர் புழல் பகுதியில் வசிக்கும் பிரேம்குமாரை கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர்.

