/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பிரியாணி கடைக்காரர் கழுத்தை நெரித்து கொலை
/
பிரியாணி கடைக்காரர் கழுத்தை நெரித்து கொலை
ADDED : ஜன 28, 2025 12:49 AM
துாத்துக்குடி : துாத்துக்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பிரியாணி கடைக்காரரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி எட்டையபுரம் ரோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சிவா 41. மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சிவா பிரியாணி ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவா குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அவர் நண்பரான முத்துகிருஷ்ணாபுரம் மோகன்ராஜை 45, வீட்டுக்கு அழைத்திருந்தார்.
இருவரும் மது அருந்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற மோகன்ராஜ், திடீரென துண்டை எடுத்து சிவாவின் கழுத்தை நெரித்தார். மதுபாட்டிலால் சரமாரியாக கழுத்தில் அடித்தார். சிவா மயங்கி விழவே மோகன்ராஜ் தப்பிசென்றுவிட்டார்.
வெளியே சென்றிருந்த சிவா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அங்கு சிவா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. சிப்காட் போலீசார் விசாரித்தனர். மோகன்ராஜை கைது செய்தனர்.